Wednesday 17 April 2013

விவசாய பல்கலையில் மே 6 முதல் இளநிலை சேர்க்கை துவக்கம்


கோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் சேர மே 6 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது.


வரும் கல்வியாண்டு முதல் 10 சதவீத மாணவர்கள் கூடுதலாக சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. விவசாய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 1330 இடங்கள், ஆறு அறிவியல் படிப்புகள் மற்றும் எழு தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஒற்றை சாரள முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்ப படிவங்களை விவசாய பல்கலைக்கழக வளாகத்தில் பெற்று கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பித்த படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் +2வில் அறிவியல் பாடப்பிரிவு எடுத்து படித்திருக்க வேண்டும்.  சேர்க்கைக்கு 5 இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் www.tnau.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 044-6611345, 6611346 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

2 comments:

Asiya Omar said...

வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளேன்.நன்றி பகிர்வுக்கு.
http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_18.html

cheena (சீனா) said...

அன்பின் கருண் குமார் - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - தகவல் பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Related Posts Plugin for WordPress, Blogger...